தீபாவளி பட்டாசு

தீபாவளி வெடி

திக்கெட்டும் சரவெடி

தேடித்தேடி நீயும் வெடி

இக்கட்டு தரும் நோயை

ஓட்டிடவே போட்டு வெடி

சிக்கலின்றி பூமியின்று

சிரித்திட ஒரு வெடி

மக்கள் கூடி வெடித்திட

வந்ததின்று தீபாவளி

கண்டங்கள் ஏழும் கூடி- நோயை

கண்ட துண்டமாக்கும் படி

கண்டு பிடி ஒரு வெடி- உன்

கையால போட்டு வெடி

இன்னும் வருங்காலமிங்கே- எந்த

நோயும் வரக்கூடாதென

வண்ண வண்ண வெடிகளை- நீல

வானத்துல போட்டு வெடி

கன்னங்கரு மேகங்கூடி

காற்று கைபிடித்து கொண்டு வந்து

சின்ன சின்ன தூறல் விழ

சில்லென்று போடு வெடி

விண்ணும் மண்ணும் தூயதாக

வேகமாக மாறிடவே

நன்மையுண்டாகும்படி

நல்ல வெடி நீயும் வெடி

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942


Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.