காலைக் கோழி கூவும் முன்னே
கண்ணை விழித்துக் கொள்ளலாம்
எண்ணெய் தேய்த்து முழுகலாம்
பட்டணத்தில் வாங்கி வந்த
பட்டு ஆடை எடுக்கலாம்
கட்டிப் பார்த்து மகிழலாம்
பட்ச மான அப்பாவிடம்
பட்டாசு கட்டு வாங்கலாம்
சுட்டு சுட்டு தீர்க்கலாம்
தருவாள் அம்மா பட்சணங்கள்
தட்டு நிறைய வாங்கலாம்
புட்டுப் புட்டுப் போடலாம்
-அழ.வள்ளியப்பா
மறுமொழி இடவும்