பள்ளிக்கூட வாசலிலே வெடி போடணும் - அதை
பார்க்கும் மூடர் கூட்டமெல்லாம் துள்ளி ஓடணும்
எள்ளி நகையாடிடவே நாம கூடணும் - அங்க
எட்டி நின்னு வெடி போட்டு ரசித்திடணும்
வெல்லம்போல இனித்திட பாடம் சொல்லிடும் – தமிழ்
வாத்தியாரை நம்ம கூட சேர்த்துக்கிடணும்
தெள்ளத் தெளிவாகத் தினம் பாடித்திரியும் – அந்த
தேன்சிட்டும் வெடிச்சத்தம் கேட்டுச் சிரிக்கும்
உள்ளபடி நல்லவங்க ஒன்று சேரணும் – தீமை
ஊரை விட்டு ஓடிடத்தான் வெடி போடணும்
கள்ளமில்லாப் பிள்ளைகள் எங்களைப்போல் – இனி
காலம் முழுதும் இந்த ஊரும் வாழணும்
– இராசபாளையம் முருகேசன் கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!