தீர்த்தங்கள்

புண்ணிய தீர்த்தங்கள் நாம் அறிந்தும், அறியாமலும் செய்துள்ள பாவங்களைப் போக்கி நம்மைப் புனிதமாக்குகின்றன. மனிதனின் முதல் எதிரி அவன் மனமே! மனஉறுதியும், தெளிவும் இல்லாத மனிதன் தான் தவறுகளைச் செய்கிறான். அதனால் பல துன்பங்களுக்கு ஆளாகி வருந்துகிறான்.

புண்ணிய தீர்த்தங்கள் சென்று (நதிகள், தடாகங்கள், ஏரிகள்) ஸ்நானம் செய்வது, மனஉறுதியையும், தூய தெளிவான சிந்தனைகளையும் தரும். ஆதலால் தான், தீர்த்த யாத்திரைகள் அவசியம் என நமது ஆன்றோர்களும், சான்றோர்களும் வற்புறுத்தியுள்ளனர்.

புண்ணிய தீர்த்தங்கள் அளவற்ற தெய்வீக சக்தியைக் கொண்டு விளங்குகின்றன. பல பிறவிகளில் நற்காரியங்களைச் செய்து அவற்றின் பலனைச் சேர்த்துக்கொண்டு பிறவி எடுத்துள்ள பாக்கியசாலிகளுக்கு மட்டும்தான் புண்ணிய தீர்த்த ஸ்நானம் கிடைக்கும்.