தீர்வும் தீர்வற்றதுமாய்…

காந்தி சிலைக்கு அருகில்
மதுக்கடை திறந்தார்கள்
ஊரைக் கூட்டிப் போராடினோம்
காந்தி சிலையை அகற்றி விட்டார்கள் – தீர்வு

எனக்கு மழை பிடிக்கும்
அவளுக்குக் கோயில்கள்
மழையில் நனைந்து கொண்டே
கோயிலுக்குப் போனோம் இருவரும் – தீர்வு

பெரியவனுக்கு ஒரு நாடு
சின்னவனுக்கு ஒரு நாடு
வீட்டில் எப்போதும் கிரிக்கெட் சண்டை!
ஐபிஎல் வந்தது
அவ்விரு நாட்டு வீரர்களும்
ஒன்றாய் விளையாடினார்கள் – தீர்வு

போலீஸ்காரனா? வாத்தியா?
ஏதாவது ஒன்றில் உன்னை
நிலை நிறுத்திக் கொள்!
நண்பர்கள் விமர்சனம்
நான் எழுத்தாளன் ஆகிவிட்டேன் – தீர்வு

முனைவர் க.வீரமணி
சென்னை
கைபேசி: 9080420849

முனைவர் க.வீரமணி அவர்களின் படைப்புகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.