பெண்ணே உனக்கு வேண்டும் துணிச்சல்
வாழ்க்கையில் போடவேண்டும் எதிர்நீச்சல்
பலரின் வார்த்தைகளில் உனது வாழ்வு அடங்குவது உணர்வாயே!
அதிலே நீச்சல் போட்டு வெளியே வா!
உனது சுதந்திரத்தை சமுதாயத்தின் கரத்திலே
அடகு வைத்ததாய் உணர்ந்து நிற்பாயே!
அதை மீட்டெடுக்கலாம் வா!
உனக்கான உலகில் நீயே ராணி!
ஊருக்காக அதை மாற்றிடாதே!
துணிச்சல் கொண்டு போராடு
உனது வாழ்வின் இறுதி வரையிலுமே!
படிப்பினங்கள் பலவும் நமக்கானது அல்லவே!
நாமே பிறருக்கான படிப்பினமாக வாழ்ந்து போவாேமே!
கூ.மு.ஷேக் அப்துல் காதர்
பள்ளபட்டி
கரூர்
கைபேசி: 9500421246