அது ஒரு விடுமுறை நாள். பூங்காவில் என்னோடு ஒரு 73 வயது முதியவர் அமர்ந்திருந்தார்.
“நீங்க வசதியான குடும்பம் ஆச்சே! உங்களுக்கு சொந்த வீடு இருக்கு. இருந்தும், எல்லாத்தையும் விட்டுட்டு, ஏன் தனியா ஒத்தையா வாடகை வீட்டுல வாழுறீங்க?” அந்த முதியவரிடம் கேட்டேன்.
“எனக்கு ரெண்டு பசங்க. ரெண்டு பேரும் அமெரிக்காவில ஐ.டி வேலை பார்க்குறாங்க. கல்யாணம் ஆகி, அங்கேயே செட்டில் ஆயிட்டாங்க. இந்த காலனில, எல்லாரும் நல்லா பேசி பழகுறாங்க. காலையில, சாயங்காலத்தில நடைபயிற்சி, யோகா செய்வேன். வயசான காலத்தில பக்கத்து வீட்டுக்காரங்க தான் எனக்குத் துணை” முதியவர் பதில் கேட்டு எனக்கு வருத்தமாக இருந்தது.
“எல்லாம் சரி. தனியா இருக்கீங்களே! உங்களுக்கு உடம்பு சரியில்லாம போனாலோ கீழ வழுக்கி விழுந்தாலோ யாரை உதவிக்கு கூப்பிடுவீங்க?” அந்த முதியவரிடம் கேட்டேன்.
“பக்கத்து வீட்டுகாரங்களுக்கு போன் செஞ்சா உதவிக்கு ஓடி வரப்போறாங்க” முதியவர் பதிலளித்தார்.
“ஐயா! எல்லாத்துக்கும் பக்கத்து வீட்டுக்காரங்களை உதவிக்கு எதிர்பார்க்காதீங்க. அவங்களுக்கும் குடும்பத்தை கவனிக்கணும். நான் வாடகை வீட்டுல தான் தனியா இருக்கேன். நான் வேணும்னா உங்க கூட வந்து தங்கிக்கவா? ராத்திரி நேரமெல்லாம், உங்களுக்கு துணையா இருப்பேன்”
கேட்டதும் பெரியவர் சட்டென்று ஒத்துக்கொண்டார்.
”அம்மா! இன்னையிலிருந்து என்னை கம்பெனி கெஸ்ட் ஹவுசில தங்கச் சொல்லீட்டாங்க.” நான் அம்மாவிடம் பெரியவருக்காக பொய் சொன்னேன்.
எம்.மனோஜ் குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!