ஓங்கார வடிவத்தில்
உறைந்தோனை உள்ளன்பால்
போற்றிவிட மாற்றம்தருமே – அந்த
ஆங்காரம் அறுந்தோடும்
அல்லலும் அனல்வீழும்
அழகான ஏற்றம்வருமே !
வானவரும் வந்துஇங்கு
வணங்குகின்ற தெய்வமந்த
வல்லவனை பாடு தினமே – அந்த
ஞானவடி வானமகன்
நன்மைசெய்யும் தேனமுதன்
நமைகாப்பான் நாடுமனமே !
நீங்காத வினைகளைந்து
நிம்மதியை கொண்டுவந்து
பாங்காக சேர்த்திடும் முல்லை – வரும்
தீங்ககற்றி திடமேற்றி
திக்கற்ற நிலைமாற்றி
தேற்றுவானே ஈசனின்பிள்ளை !
நம்பிக்கை வைத்துநிதம்
நாடிடுக அவன்பாதம்
கூடிவிடும் உற்றபலமே – அந்த
தும்பிக்கை துணைநிற்க
துயரில்லை வாழ்வினிலே
தூயவனை பற்றுநலமே !
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250