பூமியைக் கருவாய்ச் சுமப்பவளே
உன் துயரினை இங்கே யாரறிவார்?
நீர் வழிப்பாதை தான் அடைத்து
நெடிய கட்டிடம் தான் படைத்து
நீர் அருந்தும் மண்ணின் வாயடைத்து
சிமெண்ட்டால் சாலைகள் அமைத்து
காற்றினை தந்த மரமகற்றி
கருத்த தார் தனைப் பூசி
வீடுகள் தோறும் செயற்கைக் காற்றே
சுகமெனக் கருதி வாழ்வமைத்து
புகையால் கழிவால் இருக்கும்
காற்றை மாசாக்கி
மானுடம் மயங்கி இருந்திடும் வேளையில்
பூமியைக் கருவாய்ச் சுமப்பவளே!
உன் துயரினை இங்கே யாரறிவார்?
துயர் துடைக்கும் மருந்து எவர் தருவார்?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்