கண்ணே மணியே தூங்கு
கண்ணை மூடித் தூங்கு
பாலும் தருவேன் தூங்கு
பழமும் தருவேன் தூங்கு
காலை நீட்டித் தூங்கு
கண்ணே மணியே தூங்கு
பொம்மை தருவேன் தூங்கு
பொங்கல் தருவேன் தூங்கு
அம்மா வந்தால் அடிப்பார்
அழாதே கண்ணே தூங்கு
வெல்லம் தருவேன் தூங்கு
விடிய விடியத் தூங்கு
நல்ல நல்ல கதைகள்
நானும் சொல்வேன் தூங்கு
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!