சில்லென வந்து மெல்லெனத் தொட்டு
நெஞ்சுள் நயமாய் சிலிர்க்க வைத்து
சிறுதுகள் தூறல்களை துணைக்கு அழைத்து
வெற்றிடக் காற்றினை வெட்டிடச் செய்து
வெட்ட வெளியில் இரண்டறக் கலந்து
சன்னல் சந்தினில் சல்லடை நீராய்
உஷ்ணப் படலத்தை நஷ்டப் படுத்தும்
வெள்ளரிப் பிஞ்சு நல்லிளந் தென்றலே
உந்தன் அருமை என்னுள் உணர்ந்தேனே
வெயிலில் வாடி மரங்கீழ் இளைப்பாறுகையில்
சிவா.தேவராசு
ஒசூர்
கைபேசி: 9941503810
மின்னஞ்சல்: devakalai006@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!