டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் இந்திய தேசியக்கொடி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது.
குடியாத்தம் நகராட்சித் தலைவராக ஆர்.வெங்கடாசல செட்டியார் இருந்தார். அவர் வியாபார விஷயமாகப் பாம்பே செல்ல வேண்டி நேர்ந்தது. அப்போது பிளாட்பாரத்தில் விற்கப்பட்ட ‘ஸ்கிரீன்பிரிண்ட்’ என்ற புத்தகத்தை வாங்கிப் படித்தார். இந்தப் புத்தகம் தான் பின்னாளில் ‘ஹிந்துஸ்தான் பேக்டரீஸ்’ என்ற நிறுவனத்தை வெங்கடாசல செட்டியார் தொடங்கக் காரணமாகவும் அமைந்தது.
மத்திய அரசுச்செயலாளர் ஒருவர், குடியாத்தம் வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து, வெங்டாசல செட்டியார் மூலம் 12 அடிஅகலம், 18 அடிநீளம்கொண்ட தேசியக்கொடி தயார் செய்து டெல்லிக்கு எடுத்துச் சென்றார். அதனைப் பார்த்து மகாத்மா காந்தி திருப்தி தெரிவித்தார்.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில், நம் குடியாத்தத்தில் கைத்தறியில் தயாரிக்கப்பட்ட தேசியக்கொடி தான் ஏற்றப்பட்டது.