தேடலின் பயணம் முடிவதில்லை!
தினமும் தேடுகிறோம் எவற்றையாே?
சிலரோ உறவுகளை தேடுகின்றனரே!
உள்ளத்தினுள் வைத்து பூட்டிடவே!
உறவுகளை எங்கெங்கோ தேடுகின்றனரே!
பலரும் பணத்தை தேடுகின்றனரே!
தேவைக்காகவே முக்கால்பங்கினர் ஓடுகின்றனர்
ஒருபக்கம் வந்து சேர்ந்தாலுமே
மறுபக்கம் ஓடி மறைகிறதே!
கால்பங்கினர் தேவைக்கு மீறியே
சேர்த்து என்னதான் செய்வார்களோ?
தேடலின் வேட்டையில் ஆயுதமே
நமது அறிவுதான் ஆகுமே!
அறிவைக் கொண்டே தேடலின்
வெற்றியை எவரும் பிடித்திடலாமே!
கூ.மு.ஷேக் அப்துல் காதர்
கைபேசி: 9500421246