தேட நீங்க கூட வாங்க‌!

வெட்கக்கேடு என்ன சொல்ல – எழுத

வார்த்தை ஒன்னும் சிக்கவில்லை

தட்டும்போதும் ஓசையில்லை ‍- பாட்டெழுத‌

தாளம் ஒன்னும் தோணவில்லை

 

சிட்டுப்போல நான் திரிஞ்ச கதையை

சேர்த்துச் சொல்ல வார்த்தை யில்லை

பட்டுப்போன மரம் போல – எழுதும்

பாட்டுக்கு ஒரு ராகமில்லை

 

நட்ட நடு வீதியிலே – அந்த‌

நாலு பேரு பேசுங்கதை

ஒட்ட வைக்கத் துப்புமில்லை – கதையா

ஒன்னு சேர்க்க வக்குமில்லை

 

கொட்டும் மழைபோல பாட்டி சொன்ன‌

சொலவடைக்குப் பஞ்ச மில்லை

குட்டி குட்டியாக கதை

தாத்தா கொண்டு வந்ததெந்த பாதை?

 

எட்டி நானும் தேடிப்போறேன் – அதைத்

தேட நீங்க கூட வாங்க‌!

இராசபாளையம் முருகேசன்

கைபேசி: 9865802942

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.