மூன்று வகைத் தேனூறல் உண்டு. அவை
1.இஞ்சித் தேனூறல்
2. சுக்குத் தேனூறல்
3.கடுக்காய்த் தேனூறல் ஆகும்.
அவற்றை எப்படித் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
செய்முறை
இஞ்சி
இஞ்சியைத் தோல் நீக்கிச் சிறிது சிறிதாக நறுக்கி தேனில் மூழ்குமாறு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
கடுக்காய்
கடுக்காய் கொட்டையை நீக்கித் தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
சுக்கு
தோல் சீவின சுக்கை நன்றாகப் பஞ்சு போல் நசுக்கி தேனில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தும் முறை
“காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் கொள்ள
கோலை ஊன்றிக் குறுகி நடப்பவன்
கோலை வீசிக் குலாவி நடப்பானே”
1.காலையில்: சிற்றுண்டிக்கு முன்பு இஞ்சித் தேனூறலைச் சுவைத்துப் பின்பு சிற்றுண்டி உட்கொள்ள வேண்டும். எளிதான சிற்றுண்டி செரிக்கத் தேவையான பசி ஏற்படும்.
2.மதியம்: உணவு உண்ட பின்பு சுக்குத் தேனூறலை மென்று சுவைத்து உண்ண, உண்ட உணவு நன்கு செரிக்கும்
3.மாலையில்: கடுக்காயத் தோல் ஊறிய தேனூறலை உண்ண மலக்கட்டு நீங்கும்; வயிற்றில் மலம் தங்கிக் கெடுதல் செய்யாது.
மறுமொழி இடவும்