இந்தத் தேர்தலிலும்
அரசியல்வாதிக்கு வெற்றி!
தோற்று போவது மக்கள்…
இங்கு கட்சிகள் எல்லாம் கூட்டணி!
சேராமல் இருப்பது மக்கள்…
எந்த தேர்தல் வந்தாலும்
எழ்மை நிலை மாறவில்லை…
இன்னும் எத்தனை தேர்தல் இங்கு இருக்கு
ஏமாற்றம் மட்டும் நிறைந்து இருக்க…
ஊமைகளுக்கும் சட்டம் வந்தது
ஒரு வார்த்தையும் பேசக்கூடாது என்று…
சுற்றுச் சூழலை விற்று
மாசு பற்று சூழல் ஆக்கினார்கள்…
முன்னதாகவே முகமூடியும் தந்து
எல்லோரும் மூடிக்கொள் என்றார்கள்…
ஊழ் குடியை எல்லாம்
பாழ் குடியாய் ஆக்கினார்கள்…
யார் காரணம் என்று கேட்டேன்
அதா-நீ என்றார்கள்…
கல்வி இல்லை உனக்கு
குலத்தொழிலை பற்றிக்கொள் அதற்கு என்றார்கள்…
எல்லாம் விதியோ
இல்லை முதலாளிகளின் சதியோ…
அரசாங்க ஊழியருக்கு எல்லாம்
ஓய்வு வயது தான் இருக்கு
தேர்தலில் நிற்கும் தாத்தாவுக்கு
இளைஞர் அணியில் தான் பதவி இருக்கு…
இளைஞர்கள் எல்லாம் ஒதுங்கி நிற்க
தில்லியில் புதிய முதியோர் இல்லம் கட்டவிருக்க…
தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது
ரொம்ப நாளாக எங்கள் ஊரில் தண்ணீர் இல்லை
காஞ்சி போகப்போற குண்டியைத் துடைக்க
கிடைத்தது தேர்தல் அறிக்கை…
பிரச்சாரம் அனல் பறக்க
பிரச்சனைகள் எல்லாம் அப்படியே இருக்க…
தேர்தல் நாளும் வந்த்து
தேர்தலுக்கு போட வந்தேன் ஓட்டு
அந்த தேர்தல் மிஷினை காட்டு
விரும்பாத சின்னத்திலே திடீரென விழுந்ததே ஓட்டு…
எந்திர கோளாறு என்று நான் காத்து இருந்தேன்…
அதற்குள் தலைவர் வெற்றி என வாழ்த்துக்கள் தெரிவிக்க…
போடாத ஓட்டுக்கு
போட்டாலும் நாட்டை மாற்றாத ஓட்டுக்கு
விரல் மீது பூசும் மை எதற்கு?
அடையாளமா நாம் ஏமாந்ததற்கு?
மு.தனஞ்செழியன்
8778998348
காலத்தின் நெருடலை சாடிய கவிதை. வார்த்தைகளில் வலி உண்மையானது. கோபம் அனைவருக்கும் உண்டு; ஆனால் யாரும் தேர்தலில் அதை காட்டுவதில்லை. சமூகம் இப்படியாக காலத்தை கடந்து காலத்தை கடந்து நீண்ட தூரம் பயணித்து இருக்கிறது என்பதை கவிதை உள்ளா நீண்டு வேதனையோடு விளக்குகிறது.
கவிஞரின் எண்ணங்கள் விடுதலை உணர்வை மக்களிடம் தரும்.
கவிஞரின் கோபம் நாட்டின் எழுச்சியாக மாறும் நாள் ஒரு நாள் வரும்.
தேர்தல் மூலம் ஆண்டாண்டு காலமாய் மக்கள் ஏமாந்து போவதை கொஞ்சம் கோபமாகவே பதிவு செய்துள்ளீர்கள் தோழர். அருமையான கவிதை.
“தேர்தலில் நிற்கும் தாத்தாவுக்கு
இளைஞர் அணியில் தான் பதவி இருக்கு…”
அருமையான பஞ்ச்..
தேர்தல் ஒன்று தான் மக்களாட்சி அமைத்திட நமக்கு கிடைக்கும் ஒரே ஆயுதம். அதை மறக்கும் மக்களுக்கு, மறைத்த அரசியல் சூழலைப் படம் பிடித்து காட்டும் கவிதை. சிறப்பு தோழர் வாழ்த்துகள்!
ஒரு கவிஞன் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமை ஒன்று இருக்குமானால், அது தன் கவிதைகளை சரியாக எழுதுவதாகத்தான் இருக்கும்.
இருக்கிறது…!
வாழ்த்துக்கள் கவிஞர்… !