ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும் என்பது பழமொழி. தேர் இழுப்பதின் நன்மைகள் என்ன?
ஆலயத்துக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க முடியாதவர்கள் தேர்த் திருவிழா அன்று இறைவனைக் கண்ணாரக் கண்டுகளிக்க முடியும்.
தேர்த்திருவிழா அன்றோ தெய்வ சக்தி ஊர் முழுவதும் வெளிப்படும். ஊருக்குள் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் அப்போது பறந்தோடி விடும்.
தேர் இழுப்பவர்களில் பேதங்கள் கிடையாது. ஒற்றுமை உணர்வு ஓங்கும். தேர் வடத்தைத் தொட்டுக் கொண்டு ஆயிரக்கணக்கான பேர் நிற்கும்போது அங்கே அபரிமிதமான மனித சக்தி பொங்கத் தொடங்குகிறது.
அத்தனை மனிதர்களும் கடவுளின் அருளை வேண்டி கூடியிருக்கும் போது அங்கே பிரார்த்தனையின் சக்தி மகத்தானதாக மாறுகின்றது.
தேர்த்திருவிழாவில் கலந்து கொள்வதால் உண்டாகும் நன்மைகள்
1. கடவுளின் அருள் கிடைக்கும்
2. வெற்றி உண்டாகும்
3. பாபவினைகள் தீரும்
4. மனக்குழப்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும்
5. சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்
தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வோம். நம் வாழ்வில் வளம் பெறுவோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!