தேவகி மைந்தனை மனத்துளே வைத்து
சேவகம் செய்யவே உளமெலாம் திளைத்து
தூமணி வண்ணனை நெஞ்சிலே நினைந்து
பாபல பாடியே பொழுதினைக் கழித்து
மூவடி அளந்தவன் கருத்திலே சுமந்து
திருவடி சேர்ந்திட அன்பெலாம் பொழிந்து
ஆகிட, பாற்கடல் பள்ளியான் கனிந்தே
பேரருள் சுரந்திட, வாழ்வெலாம் மகிழ்வே…
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com