சர்க்கரை நோய் உள்ள ஒருவருக்கு ஒரு நாளைக்கு 1700 கலோரிச்சத்து தேவைப்படுகிறது என்றால், அவர் தன்னுடைய உணவை கீழ்க்கண்டவாறு பிரித்துக் கொள்ள வேண்டும்.
காலை டீ, காபி (அ) பால் 85 கலோரி
காலை டிபன் 340 கலோரி
இடைவேளை உணவு 170 கலோரி
மதிய உணவு 510 கலோரி
இடைவேளை உணவு 170 கலோரி
மாலை டீ, காபி (அ) பால் 85 கலோரி
இரவு உணவு 340 கலோரி
மொத்தம் 1700 கலோரி
உதாராணமாக காலை டிபன் ஒருவருக்கு 340 கலோரி தேவை என்றால் அவருக்கு விருப்பமான உணவை அவராகவே கீழ்க்கண்ட மூன்று முறைகளில் தேர்ந்தெடுக்கலாம்.
1. இட்லி (45கி) நான்கு – 260 கலோரி
சாம்பார் 150மிலி – 50 கலோரி
சட்னி 1 டீஸ்பூன் – 40 கலோரி
(அல்லது)
2. தோசை (50கி) மூன்று – 300 கலோரி
சாம்பார் 150மிலி – 50 கலோரி
(அல்லது)
3. உப்புமா 117.5கி – 235 கலோரி
இட்லி (45கி) ஒன்று – 65 கலோரி
சாம்பார் 150மிலி – 50 கலோரி
கலோரி அட்டவணையைப் பார்த்து உங்களுக்குத் தேவையான உணவை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலே சொல்லப்பட்ட மூன்று முறைகளில் உங்கள் காலை சிற்றுண்டியை நீங்கள் வடிவமைத்துக் கொள்ளலாம். இதைப் போலவே மதியம் மற்றும் இரவு உணவுகளையும் உங்கள் விருப்பத்திற்கேற்றாற்போல தேர்வு செய்து கொள்ளலாம்.
(ஒற்றை ஸ்பூன் தேங்காய் சட்னி சாப்பிடுவது ஒரு இட்லி சாப்பிடுவதற்குச் சமம் என்பதை கவனிக்கவும்)