அணைகளுக்குள் முடங்கிப்
போனதற்குப் பின்
ஆறுகள் தூக்கி வந்த
சுதந்திரக் கொடிகளும் மூழ்கிப் போயின!
புலிகளின் நடமாட்டங்களை
ஊடகங்கள் உமிழும் போதுதான்
நிலங்களில் நீண்டு இருந்த காடுகளை
காட்டிக் கொடுக்கின்றன வரைபடங்கள்!
நல்ல மீட்பர் இன்றி சுமந்து
கொண்டிருக்கின்றன சிலுவைகளை
உயிரியல் பூங்காக்களில் ஓலமிட்டபடியே
உரமற்ற உயிரினங்கள்!
லட்சுமணக் கோடுகளை தாண்டிய
சீதையின் கதியாய்
தேசத்திற்கு உள்ளேயும் கேடுகளை விளைவிக்கும்
கோடுகளை எல்லை என
முணுமுணுத்துக் கொள்கிறது மானுடம்!
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!