வழியின்றி தவிக்கும் மக்களின்
வழியாக பிறந்தது தைத்திங்கள்!
விழிமூடி கிடக்கும் மக்கள்
விழித்துக் கொள்ளும் பொங்கல்!
கழிகரு கரும்பும் உழவர்
கழனி விளைந்த பயிரும்
மாவென ஒலிதரும் பசுவும்
மாசிலா மஞ்சளும் இஞ்சியும்
சீறும் காளையும் தோளும்
ஏறும் இளைஞனின் வீரமும்
கன்னியின் கையில் செம்பும்
மஞ்சள் நீரும் ஊற்றும்
ஆட்டமும் சிறுவர் போட்டியும்
வழி பிறக்கும் தையில்
வைரஸை விரட்டும் வழியாக
நிலைக்கட்டும் மகிழ்ச்சி வழி!
பொங்கலோ பொங்கல்!
தமிழரின் தரமான திருநாள்
வாழ்த்துக்கள்!

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!