ஒன்றும் சொல்வதற்கில்லை
அப்படி ஆரம்பித்துச் சொல்லாமலும்
இருக்க முடியாது என்கிறபோது
சொல்வதற்கு ஏதோ இருக்கிறது
மடிந்து போனது எல்லாம்
மீண்டும் ஒரு நாள் பிறக்கப் போகிறது
ஆட்டத்தின் தொடக்கம்
கட்டியம் கூறுவது போல்
எங்கிருந்தோ வெடிக்கப் போகிறது
அந்த ஒரு நிகழ்வு
அது ஒரு விதியின் பாத்திரத்தை
பார்வையிலிருந்து தடுத்து
முழுமையாக உணரச் செய்கிறது
உடைய வேண்டும்
உடைந்ததை வைத்துக் கொண்டு
வேறு ஒரு ஆட்டத்தை
தொடங்க வேண்டும்
இந்த மனதை வைத்துக்கொண்டு
ஒன்றும் செய்ய முடியாதபோது
அதற்கான நெருங்கிய மொழியிலிருந்து
அதனை மொழியாக்கம் செய்கிறான்
அந்த பிரதேசம் தான்
அந்த பிரதேசத்தைப் பற்றி
சொல்லிக் கொண்டே இருக்கிறது
சுருங்குகிறது உலகம்
சுருங்கிச் சுருங்கி
இல்லாமல் போகிறது
என் கண்
புஷ்பால ஜெயக்குமார்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!