வங்கியில் ஒவ்வொரு மாதமும் பணத்தைச் செலுத்திச் சேமிப்பது தான் தொடர் வைப்பு நிதி திட்டம் ஆகும்.ஆறு மாதத்திலிருந்து பத்து வருடம் வரை இவ்விதம் செய்யலாம்.
அந்தக் குறிப்பிட்ட காலம் முடிந்ததும் வங்கி வட்டியுடன் அந்தப் பணத்தை நமக்குத் திரும்பக் கொடுக்கும். வங்கி சேமிப்புக் கணக்கை விட இதில் நமக்கு அதிக வட்டி கிடைக்கும்.
நமக்கு இடையில் பணம் தேவைப்பட்டால் இந்தக் கணக்கிலிருந்து நாம் எடுக்க முடியாது. ஆனால் அந்தக் கணக்கை முடிந்து மொத்தப் பணத்தையும் வட்டியுடன் சேர்த்துப் பெற்றுக் கொள்ளலாம்.
சேமிக்கும் பழக்கத்தை நாம் உருவாக்க இந்தக் கணக்கு நமக்குத் துணை செய்யும்.