தோட்டம்

தோட்டம் நல்ல தோட்டம் – நம்மை
சொக்க வைக்கும் தோட்டம்
கூட்டமாக நாமும் – ஒன்றாய்க்
கூடி ஆடும் தோட்டம்

வண்ண வண்ண மலரால் – நம்மை
மகிழ வைக்கும் செடிகள்
தின்ன தின்ன பழங்கள் – மேலும்
தின்னக் கொடுக்கும் மரங்கள்

கொஞ்சும் கிளியின் குரலும் – கருங்
குயிலின் இசையும் அடடா
நெஞ்சை அள்ளுகிறதே – இதை
நினைக்கும் போதே இன்பம்

பட்டுப் போல அழகாய் – புல்
படர்ந்திருக்கும் தரையில்
விட்டுப் போக மனமே – இல்லை
மிகவும் நல்ல தோட்டம்

-அழ.வள்ளியப்பா

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.