கண்ணே மணியே
கண்மணி உனையே மறவேனே
என்மனம் என்னும்
ஆழியில் உன்னை அறிவேனே
எல்லா நொடியும்
என்னுயிர் சுவாசம் நீதானே
ஒவ்வொரு நாளும்
உனக்கென வாழும் உறவானேன்
முகவையில் முகந்தால் வடிவற்ற நீரும்
வடிவத்தைப் பெறுமடியே
அகவையில் ஒன்றாய் இருந்திட்ட போதும்
நீயென் தாயடியே
என்னுடை வெற்றியைக் காண்கின்ற பொழுதினில்
மகிழ்ந்தாய் அல்லவா?
என்றும் உந்தன் மனதளவில் நீ
குழந்தை அல்லவா?
அழகே அமுதே அன்பின் வடிவே
ஆனந்தம் அளித்தவளே
தூயஉன் சொல்லால் துவண்ட என்மனதின்
துன்பம் துடைத்தவளே
இன்னிசைக் குயிலும் தன்னிசை மறந்து
தவிக்குது பெண்கிளியே
உன்போல் குரலில் இனிமை உடையவள்
உலகில் பிறக்கலையே
உன்னைப் பிரிந்தால் ஒவ்வொரு நொடியும்
ஜென்மம் ஆகிறதே
இருந்திட்ட போதும் உன்னை நினைத்தால்
கசப்பும் இனிக்கிறதே
பெண்ணே உலகில் புதிதொரு அதிசயம்
பூமியில் நிகழ்கிறதே
உயிரே உன்னைப் பிரிந்திட்ட போதும்
உடலிங்கு இயங்கிடுதே
மறுமொழி இடவும்