நீ வேண்டாம்
உன் தேவைகள்
இனி இல்லை
என்று உன் முன்னால்
உரைக்க மாட்டார்கள்!
சிறு சிறு அலட்சியங்கள்
அக்கறையின்மை
அன்பில்லா பேச்சுக்கள்
நாசூக்காக நீ வேண்டாமென
உணர்த்திக் கொண்டே
இருப்பார்கள்!
உன் கைபிடித்து
தள்ளினால் தான்
அவ்விடம் விட்டுப்
போவேனென நின்று
கொண்டு இருக்காதே!
அவர்கள் அந்த ஒற்றைச் சொல்லை
அவ்வளவு எளிதில் யாருக்கும் தர
துணிய மாட்டார்கள்!
நீ புரிந்து கொண்டு
நீ வெளியேற வேண்டும்
என எதிர்பார்ப்பார்கள்!
மற்றொரு நாள் மற்றொரு தேவைக்கு
மன உறுத்தலே இன்றி
மறுபடியும் உனை அழைப்பார்கள்!
அவர்கள் அப்படித்தான்
அவ்வளவு தான் என
கடந்து சென்று விடு
உன் புன்னகையில்!
ஞா.கலைச்செல்வி
சென்னை
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!