நங்கைநல்லூர் பகவதியே!

நங்கைநல்லூர் பகவதியே
பொங்கும் எழில் சிரிப்புடனே!

எங்கள் குறை களைவதற்கே
அன்னை நீயே அமர்ந்திருக்காய்!

கண்ணன் அவள் சோதரியை போற்றி புகழோது
அன்னை அவளுக்கு மேலான தெய்வம் கிடையாது!

கன்னல் வரம் தேவி வாரித் தரும் மாரி
துன்பமெல்லாம் அழிப்பாள் இன்பம் என்றும் தருவாள்!

மல்லிப்பூ அணிந்து
மலர் முகம் காட்டிடுவாள்!

அண்ணலுக்கு இணையாகக்
கேட்கும் வரம் தந்திடுவாள்!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்