புகைப்பிடித்தல் எவ்வளவு மோசமானது என்பதைத் தெளிவாகச் சொல்லும் கவிதை. போதை ஏற்படுத்தும் அழிவு பற்றிப் புகை பேசுவது போல அமைந்துள்ளது கவிதை.
ஊதி ஊதிப் போட்ட பின்னே
மிஞ்சியது பஞ்சு மட்டுமே!
சாதிக்கத் துடிக்கும் நெஞ்சு
சோதித்துப் பார்த்தது என்னை
சோதனை ஓட்டத்தில்
முடிவெனக்கு சாதகமாய்!
சோதிப்போர் உடல் மட்டும்
எப்போதும் வேதனையாய்…
ஊதும் அந்நேரம்
உட்செல்லும் நானோ
மிச்சமீதி உடலெங்கும்
அத்தனையின் உட்புகுந்து
மிஞ்சாத பாகத்தை
நஞ்சாக மாற்றிடுவேன்!
எனைப் புகைத்த தோசத்தால்
இழப்பர் உடல் தேசத்தை…
புகைக்கும் தவறாலே
இறப்போர் பல பேரே!
புற்றுநோயும் என்மீது
பற்றுள்ள கூட்டாளியே!
இழப்புகள் இருந்தாலும்
புகையென்ற சிற்றின்பம்
ஊக்கத்தைக் கொடுக்கும் என்பர்
எனைப் புகைத்துச் சுவைப்போரே…
உற்சாகமாய் நீ நினைக்கும்
நச்சுப்புகை நானோ
என்னவெலாம் செய்திடுவேன்
சொல்லட்டுமா நானும்
தூய உன் சுவாசத்தையே
வெளியேற்றச் செய்திடுவேன்
பிராண வாயுக்களின்
பிராணம் நான் போக்கிடுவேன்….
இவையெல்லாம் தெரிந்தபின்னும்
சுவையெனப் புகைப்போர்க்கு
அழகாய் ஒருவார்த்தை
நயமாய் நான் சொல்வேன்
நலமான வாழ்விற்கு
இதை நீ கேட்பாயே
புகைக்காதே நஞ்சை!
இழக்காதே நெஞ்சை!!..
சிவா.தேவராசு
ஓசூர்
கைபேசி: 9941503810
மின்னஞ்சல்: devakalai006@gmail.com