உங்களிடம் இருக்கும்
அறியாமையைக் கொஞ்சம் தாருங்கள்
அத்துடன்
அந்த கல்லாமையின் புன்முறுவல்
உள்ளிருக்கும்!
யாவையும்
துடைத்தெறிந்து
காம்பு சப்பும்
மடியிலிருந்து
தொடங்கலாமா?
மண்ணோடு கலந்துவிட்ட
தொப்புள் கொடி
உறவற்ற
துயரம் சொல்லிலடங்காது!
அலுப்பு கூட்டும்
அன்றாடத்தின்
மதிப்புகள் கூடிய
வாழ்வைவிட்டு
அக்காக்கள் தேடும்
தம்பியாக
ஆடு மாடுகளுக்குள்
ஒளிந்து ஓட
என்ன செய்ய வேண்டும்
இப்பொழுது
நான்?
ரவி அல்லது
ravialladhu@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!