எனக்கும் அவளுக்குமான
வெவ்வேறு ஆசைகள்
நிலத்தில் சிந்தின
எங்களைக் கட்டுப்படுத்திய
பிராந்திய விழுமியங்களின்
சங்கிலியின் ஓசை
எங்கள் இருவருக்கும்
துல்லியமாகக் கேட்டது
கடவுள் எந்த பொறுப்பும் அற்று
எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்
ஒற்றை தலைப்பில்
உருவான விருப்பங்கள்
எங்களைப் பொதுமைப் படுத்தியது
பிறகு வெகுஜன மக்களுக்கு
தெரியும்படி கசிந்தது
அழகுறும் பொம்மைக்கு
உயிர் வந்தது போல்
பிரத்தியேகமான சமிக்ஞையில்
எனது ஒளிரும் இளமை
பிரகாசமென வீசத் தொடங்கியது
ஜலதரங்கத்தின் இசையில்
நானும் அவளும்
ஆடிக் கொண்டிருந்தோம்
Visited 1 times, 1 visit(s) today
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!