வெண்ணிற மலர்கள் சொல்லும்
மணம் தான்
வாழ்வின் உச்சம் என்று
வண்ண மலர்களோ
வண்ணங்களில்லா வாழ்வில்
வசந்தம் ஏது என்று கேட்கும்?
திருநீற்று பச்சையும் துளசிச் செடியும்
மெல்லிய வாசனைதானே
சூழலலின் சுகம் என்றே கூறும்
ரீங்காரம் இட்டபடி வருகின்ற
வண்டுகளும் வண்ணத்பூச்சிகளும்
ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியை
உணர்ந்திடச் சொல்லி பறக்கும்
இப்படியாக இருந்திட்ட
வனங்கள் நந்தவனங்கள்
இன்று எங்கே
தொலைந்து போயின?
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942