துணிவே உனக்கு துணையானால்
விழியே உனக்கு வழியாகும்
துயரம் கண்டு துவண்டுவிட்டால் மீண்டும்
அதனை துணிவைக் கொண்டே வென்று விடு
முடங்கிக்கிடந்தால் சிலந்தி வலையும் உனை சிறைபிடிக்க முயலும்
முயற்சி செய்தால் சிலந்தி வலையிலும் கயல் பிடிக்க இயலும்
மனமே வெட்டுண்டால் துண்டாகும் விரலாயிராமல்
துண்டுண்டாலும் மீண்டும் துளிர்க்கும் உயிராயிரு
ஒளிகாட்டும் தூரம்தான் வழியென்று ஓய்ந்துவிட்டால்
உனை பழித்துச்சொல்ல பலபேர் வரிசையில் நிற்பர்
பழிசொல்லும் எவரும் நமக்கு வழிசொல்லப் போவதில்லை
வழிசொல்லும் சிலரை விழியில் நீங்காமல் வைத்திருப்போம்
வீரியமுள்ள விதையை வீதியினோரம் வீசியெறிந்தாலும்
காரியத்தோடு மண்ணைப் பிளந்து விண்ணைக் காணும்
மனமே மனிதனை இயக்கும் மகத்தான சக்தியாகும்
சக்தியோடு புத்தியும் சேர்ந்தால் சாதிப்பது நீயாகவே இருப்பாய்
க.வடிவேலு
ஆசிரியர் பயிற்றுநர்
காட்பாடி
6374836353
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!