புத்தரிசி வந்துருச்சு…
புது மஞ்சள் காத்திருக்கு….
அச்சமின்றி சூரியனை …
அனைவருமே வணங்கவென்று…
வந்திடும் பொங்கல்…
வளம் தந்திடும் என்றும்…
நித்தம் புது மலர் பறிச்சு…
நிறைந்த வண்ண கோலமிட்டு…
முப்பது நாள் மார்கழியை…
முகமலர்ந்து வழியனுப்பி….
வந்திடும் பொங்கல்…
வளம் தந்திடும் என்றும்…
மொத்தமாக ஊரு கூடி…
வீரம் காட்டி விளையாடி….
சத்தமின்றி காதலியின்…
சம்மதத்தை பெறுவதற்கு…
வழிகாட்டிடும் பொங்கல்..
வளம் தந்திடும் என்றும்…
அத்தை மகள் வளர்த்த காளை…
அடக்கி வந்த மாமனையை…
வெட்கம் விட்டு கரம் பிடிக்கும்…
வீர மங்கை வாழ்கவென….
வந்திடும் பொங்கல்
வளம் தந்திடும் என்றும்…
எத்தனையோ பண்டிகைகள்….
வந்தாலும் பொங்கல் போல …
நன்றி சொல்லும்பண்பாடு…
நமக்கு சொல்லி தர வென்று…
வந்திடும் பொங்கல்…
வளம் தந்திடும் என்றும் …
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!