படிக்க வைக்க அடிச்ச ஆசிரியரையும்
தடுக்கி விழாது பல முறை
தடுத்து நிறுத்திய நண்பனையும்
வெடுக்கென திட்டினாலும்
வாழ்வைக் கற்றுக் கொடுத்த பெற்றோரையும்
நினைக்கும் பொழுது எல்லாம்
நன்றி சொல்ல வேண்டும்!
நாம் தொட்ட உயரத்தைத்
தொட வைத்த ஏணிகளை எப்பொழுதும்
மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்க
நலமே விளையும் நம் பலமும் பெருகும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942