நன்று!

வாடும் உயிர்களைப் பேணுதல் நன்றே
நாடும் மனிதர்க்கு ஈதலும் நன்றே
ஈட்டிய செல்வம் உதவிடல் நன்றே
கிட்டிடும் வான்புகழ் நன்று!

பெரியார் சிறியார் மதிப்பதும் நன்றே
அறியாத் தவறைப் பொறுத்தலும் நன்றே
எதுவாய் இருப்பினும் ஆராய்தல் நன்றே
இதமாய் நடத்தலும் நன்று!

நன்மையும் தீமையும் வந்திடல் நன்றே
திண்மையாய் உண்மையாய் ஏற்றிடல் நன்றே
நல்லவர் தீயவர் எங்குமே உண்டே
நாளும் விழித்திடல் நன்று!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com