அழகாய் முழுதாய் வளர்வது
அகிலத்தை குளிரச்செய்வது
பின் சிறுக சிறுக தேய்ந்து
முழுமையாக மறைவது என
நிலவைப் போல ஒரு வாழ்க்கை!
தினமும் அளப்பரிய ஆற்றலுடன்
தன் சக்தியால் உலகின்
அனைத்து உயிர்களுக்கும் ஆற்றல் அளித்து
குன்றாத ஆற்றலுடன் குவலயம் காக்கும்
ஆதவனைப் போன்ற ஒரு வாழ்க்கை!
ஒரே இடம் ஒரே நிலை
தேய்வதும் வளர்வதும் இல்லாமல்
நிலைத்திருக்கும் நட்சத்திரங்கள்
போன்ற ஒரு வாழ்க்கை!
ஆதவன் போல பிறருக்கு உதவுவதால்
எப்போதும் நமக்கான ஆற்றல் குறையாது!
அழகு நிலவாக பிறரை மகிழ்விக்கும்
வாழ்வில் வளர்ச்சி மட்டுமல்ல
வீழ்ச்சியும் வரக் கூடும்!
நட்சத்திரங்கள் போல
மழித்தலும் நீட்டலும்
இல்லா வாழ்வில் சராசரி தான்!
எது நமக்கானது என்பதை
நாம் தான் முடிவு செய்ய முடியும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!