நம்பிக்கையுடன் இரு!
பிறர் மீது அல்ல;
உன் மீது!
செல்வாக்கைப் பெற
சொல்வாக்கை காத்திடு!
முடியவில்லை என, செய்யும்
முயற்சியைக் கைவிடாதே!
முடியாதது இல்லை
முயற்சியால்; நிச்சயம்
முடியும் பயிற்சியால்!
ஏமாற்ற எண்ணாதே!
பாராட்ட தயங்காதே!
புகழுக்கு மயங்காதே!
தாழ்வாய் நினைக்காதே யாரையும்!
வாழ்வாய் பெறுவாய் நல்பேரையும்!
உழைத்து காத்திரு கிடைக்கும் வரை!
உழைப்பை மறவாதே கிடைத்த பின்பும்!
இருப்பதில் எடு கொடு!
கொடுப்பதில் தடை விடு!
மௌனமாய் இரு சில இடங்களில்!
மதியோடு இரு பல இடங்களில்!
உன்னை நம்பியவருக்கு படை கொடு!
உன்னை நம்பாதவருக்கு விடை கொடு!
கோபம் கொள்ளும் வேளை
பொறுமை மட்டும் தேவை!
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்