நம்பிக்கையை உருவாக்குவோம்!

நம்பிக்கையே வாழ்க்கை‘ என்பது பழமொழி. நாம் செய்யும் செயலிலும் எண்ணத்திலும் நம்பிக்கை திடமாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அந்த செயலும் எண்ணமும் வெற்றி பெறும்.

இந்த பரந்து விரிந்த உலகில் பலவிதமான மனிதர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு நம்பிக்கை என்பது அதிகமாகவும் இல்லை; குறைவாகவும் இல்லை; மிதமாக இருக்கிறது.

இந்த உலகத்தில் நம்பிக்கையை நிலைநாட்டிச் சென்றவர்கள் சிலர். அவர்களை வாழ்க்கையில் முன் உதாரணமாகக் கொண்டவர்கள் பலர்.

இந்த உலகில் நம்பிக்கையை எவ்வாறு உருவாக்குவது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் இனி விரிவாய்க் காண்போம்.

நம்பிக்கை உள்ள மனிதர்கள்

பிரேஸில் நாட்டில் மக்களுக்கு ‘யார் அதிக நேரம் கைகளைத் தட்டிக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும்’ என்று ஒரு போட்டி அறிவிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் அனைவரும் கலந்து கொண்டனர்.

ஓர் இருட்டு அறையில் எல்லோரும் கைகளை தட்டிக் கொண்டிருந்தார்கள். அங்கு ஒரு ஒளி விளக்கு சுழன்று கொண்டே இருந்தது.

அந்த போட்டியில் தொடர்ந்து ஐந்து மணி நேரமாக இருவர் கைகளை தட்டிக் கொண்டிருந்தனர். அவர்களின் பக்கம் அந்த ஒளி விளக்கு சுழன்று நின்றது. அனைவரும் அந்த இருவரை ஆச்சர்யமாகப் பார்த்தனர்.

ஆனால் அந்த இருவருக்கும் “நம்பிக்கை” என்ற ஒரு ஆயுதம் மட்டுமே இருந்தது.

இப்படிப்பட்ட நம்பிக்கை உள்ள மனிதர்களை நாம் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு உலகில் நம்பிக்கையை உருவாக்கலாம்.

சபரியின் தீராத நம்பிக்கை

கம்பராமாயணத்தில் சபரி ‘தன்னுடைய குடிலுக்கு ராமர் வருவார்!’ என்ற தீராத நம்பிக்கையோடு பல ஆண்டுகளாக காத்திருந்தார்.

திடீரென்று ஒருநாள் ராமரும் சபரியின் குடிலுக்கு வருகை தந்தார். ராமருக்காக பறித்து வைத்திருந்த இலந்தைப் பழங்களை கொடுத்து அகம் மகிழ்ந்தார் சபரி.

இதுவே நம்பிக்கைக்கு முக்கியமான ஒரு சான்றாகும். இந்த நிகழ்வையும் நாம் மனதில் எடுத்துக் கொண்டு உலகில் நம்பிக்கையை உருவாக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாமரனின் நம்பிக்கை

என்ற வசனத்தை கூறி ஒரு பாமர மனிதர் முழு நம்பிக்கையோடு ஜெபித்துக் கொண்டிருந்தார்.

அவருடைய ஜெபத்தை ஏற்றுக்கொண்டு ஆண்டவர் இயேசு அவனுடைய வீட்டு கதவை தட்டினார்.

கதவைத் திறந்த உடன் ஆண்டவர் இயேசுவைப் பார்த்து அளவில்லாத மகிழ்ச்சியில் உரைந்து போனார். அவருக்கு காட்சி அளித்து இயேசு மறைந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முழு நம்பிக்கையோடு இருக்கும் இந்த மனிதர்களின் பண்புகளை நாம் பாடங்களாக எடுத்துக் கொண்டால் உலகத்தில் நம்பிக்கை உருவாக்கலாம் என்பது உறுதி!

இறைவனிடத்தில் நம்பிக்கை

ஒரு காலத்தில் மெக்காவில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் துன்பப்பட்டார்கள். அப்போது அதை அறிந்த நபிகள் நாயகம் அவர்கள் அந்த மக்களை ஒரு பரந்த வெளிக்கு கூட்டிச் சென்று மழை பெய்வதற்காக நம்பிக்கையோடு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

மக்கள் இறைவனின் மீது வைத்த நம்பிக்கையால் உடனே மழை பொழிந்து மெக்காவில் பஞ்சம் அகன்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதரிடத்திலும் இருக்க வேண்டும்.

நம்பிக்கை இல்லாத உலகத்தில் கலகம் மட்டுமே இருக்கும்.

என்பது பொன் மொழியாகும்.

கை இல்லாத மனிதர்களிடத்தில் இருந்த நம்பிக்கையும், கம்பராமாயணத்தில் சபரி ராமனின் மீது வைத்த நம்பிக்கையும், இயேசுவின் மீது பாமரன் வைத்த நம்பிக்கையும், மெக்காவில் உள்ள மக்கள் இறைவனிடம் வைத்த நம்பிக்கையும் இந்த உலகத்தில் நம்பிக்கையே உருவாக்குவதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

நம்பிக்கைக்கு உதாரணங்கள் கடுகளவு இல்லை; கடலளவு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட நிகழ்வுகளை நம் மனதில் பதித்துக் கொண்டு இந்த உலகத்தில் நம்பிக்கையை உருவாக்கி நிலைநாட்டலாம்.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி: 9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com