நம்பிக்கை

ஒருவர் திருமணமாகி, தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார்.

கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன; இடியும் மின்னலுமாய் இருக்கிறது; படகு ஆடுகிறது.

அவரின் மனைவி நடுங்குகிறாள்.

அமைதியாய் புன்னகையோடு படகை செலுத்தும் கணவனை பார்த்து அவள் கேட்கிறாள்.

“உங்களுக்கு பயமாக இல்லையா?”

கணவன் ஒன்றுமே சொல்லாமல், தன் உறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து,  அவள் கழுத்தில் வைக்கிறார்.

அவளோ பயப்படாமல் சிரிக்கிறாள்.

கணவன், ”இந்த கத்தி, பயங்கரமானது, உன்னை வெட்டிவிடும், நீயோ சிரிக்கிறாயே?” என்று.

அதற்கு அவள் சொல்கிறாள், ”கத்தி பயங்கரமானதுதான்; ஆனால்,  அதை வைத்திருப்பவர் என் அன்புக்குரியவர்; அதனால் பயமில்லை”

கணவன் புன்முறுவலோடு மனைவியிடம்  சொன்னான்.

”இந்த அலைகளும் இடிகளும் மின்னல்களும்     பயங்கரமானவை. ஆனால், அவற்றைத் தன்வசம் வைத்திருக்கும் இறைவன் என் அன்புக்குரியவர்;  அதனால் எனக்கு பயமில்லை”

எவ்வளவு நம்பிக்கை!

இதுதாங்க நம்பிக்கை!

நம்பிக்கை தாங்க வாழ்க்கை!

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.