நம்மை காக்கும் அன்னையவள் பகவதியே
நன்மை தந்து காத்திடுவாள் அருள்நிதியே
நாடிவரும் பக்தருக்கு தரும் வரமே
கோடிவரம் வாழ்முழுதும் அவள் வரவே
நங்கைநல்லூர் அமர்ந்த செல்வி எழுந்து வந்தாள்
நங்கையவள் நிறைந்து நின்று மகிழ்வு கொண்டாள்
வேள்வியிலே பகவதியாய் காட்சி தந்தாள்
நாளெல்லாம் அவள் நினைவே துணை இருப்பாள்
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com