நம் வெற்றி!

நம் வெற்றி

முயல் ஆமை கதை நாம் அனைவரும் அறிந்ததே.

முயல் தூங்கியதால் ஆமை வென்றது.

கதையின் நீதி?

இரண்டாம் முறையாக பந்தயம் நடைபெற்றது.

கவனமாக இருந்ததால் முயல் வென்றது.

கதையின் நீதி?

முன்றாம் முறை பந்தயம் நடந்தது.

ஆனால் தரைப் பகுதி மற்றும் நீர்வழிப் பகுதி என பந்தயப் பாதை மாற்றம் செய்யப்பட்டது.

நீச்சல் தெரியாத முயல் தோற்றது.

கதையின் நீதி?

நான்காம் முறையாக பகுதி நீர் வழிப் பாதை பகுதி நிலப் பாதையில் பந்தயம் நடைபெற்றது.

நீர் வழிப் பாதையில் ஆமை முயலை சுமந்து சென்றது. நிலப் பகுதியில் முயல் ஆமையினை சுமந்து சென்றது. இருவருமே வென்றனர்.

கதையின் நீதி?

நம் வெற்றி யாருக்கும் தோல்வி தராது எனில் அதில் துயரம் ஏது?

இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942

இராசபாளையம் முருகேசன் அவர்களின் படைப்புகள்