சென்னிவீரம்பாளையம் லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் நரசிம்ம ஜெயந்தி வழிபாடு.
காரமடை அருகேயுள்ள சென்னிவீரம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இத்தல மூலவரான லட்சுமி நரசிம்மர் சுதையாலான திருமேனியராக அருள்பாலிக்கிறார்.
லட்சுமி நரசிம்மருக்கும்,கருடாழ்வாருக்கும் அபிஷேகம் முடிந்து,லட்சுமி நரசிம்மருக்கு துளசி மற்றும் மலர்களால் சிறப்பு அலங்கார பூஜை முடிந்து தீபாராதனை நடைபெற்றது.
இந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் மற்றும் புகைப்படம்: சரண், காரமடை.