பிறருக்கு வலி தராமல்
பிறரை சிரிக்க வைப்பவனே
பிறப்பில் உயர்ந்த பிறப்பு
பிறருக்காக அழுபவனுக்கு
தனக்காக அழும்
நிலை வராது
பிறரின் வலியினை
உயர்ந்தவனே வலிமை
உடையவன் ஆகிறான்
பிறருக்கு உதவி
செய்பவன் தனக்கான
உதவியை தேட
தேவையில்லை
பிறருக்கு கொடுப்பதே
தலை காக்கும்
தர்மம்
பிறரை மகிழ்வித்து
மகிழ்வதே உண்மையான
மகிழ்ச்சி
பிறரிடம் காட்டும்
அன்பே அறம்
ஆகிறது
பிறரை உயர்த்துங்கள்
தானாக நீங்கள்
உயர்வீர்கள்
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!