நல்லவன் போலவே நடிப்பான்… நம்பி விடாதே!

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல, நாட்டில் இளம்பெண்களுக்கு நிறைய கொடுமைகள் நிகழ்கின்றன.

பெரும்பாலான சமயங்களில் மோசமானவர்களின் ஆசை வார்த்தைகளே, பெண்களுக்குத் தூண்டில்களாய் வந்து விழுகின்றன. அவர்களும் அதில் வீழ்ந்து விடுகின்றார்கள்.

அத்தகைய கொடியவர்களுக்கு இரையாகாமல் இருப்பதற்காக, இளம்பெண்களுக்கான கவிதை இது.

அன்பே அழகே என்பான்
இந்த உலகில் யாரும்
உன்னை போல் இல்லை என்பான்…

பேசலாம் பழகலாம்
எல்லைகள் இல்லை
எங்கும் செல்லலாம் என்பான்…

நம்பி விடாதே!
நல்லவன் போலவே நடிப்பான்…

அன்னையும் தந்தையும் போல
அன்பு செய்ய வேறு உறவுகள் இல்லையடி…

உதிரம் கொட்டி
உயிர் கொட்டி வளர்த்தோம்
ஒரு நாளில் வந்த சொந்தம்
உயர்வானதடி உனக்கு…

மாறிவிடும் அழகில்
மீறி விட போவதுதான் என்னடி?
மாறிவிடும் குணத்தில்
மனிதனுக்கு நல்ல குணம் ஏதடி?

உன் தந்தையும் ராமன் இல்லை
தாயும் சீதை இல்லை
தவறான பாதையில் என்றுமே
போனதில்லை…

ஒரு பிறப்பு தானடி எங்களுக்கு
உன்னை விட்டால் வேறு பந்தம் ஏதடி?

பச்சைப்புல் பனிபோல
இச்சைக்கு உன் இதழ் கேட்பான்
நண்பர்களையும் தான் வரச் சொல்லுவான்
நிச்சயமாய் நம்பிவிடாதே!

காமம் எது? காதல் எது? என்று
தெரியாத காலம் இது…
வல்லுணர்வு தான் செய்வான்
கொடிய மிருகம் போலவே தான் நடப்பான்.

அன்னைசொல் மதிக்காமல்
சென்றாயடி நீ
அடி விழும் போதெல்லாம்
அலறினாயாடி… அம்மா…

– மு.தனஞ்செழியன்
பாக்கம்–602024
8778998348, 9840607954
dhananchezhiyan.mphil@gmail.com

 

7 Replies to “நல்லவன் போலவே நடிப்பான்… நம்பி விடாதே!”

  1. அருமையான கவிதை. ஆழமான உணர்வு. பார்ப்பவை எல்லாம் தெளிவாக இல்லை. அவன் உணர்ந்ததை நாம் உணரச் செய்வதுதான் நல்லது என்று அறிவுறுத்த வந்த கவிதை.

  2. இளைய தலைமுறையின் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான அறிவுரைகளை சொல்லியிருக்கிறீர்கள் !,
    மிகவும் அன்பாக !!

    மிக்க நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.