நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க

நல்ல நாள், நல்ல நேரம் எப்படி பார்ப்பது?

1. அன்றைய நாள் (தினம்) கரிநாள் ஆக இருத்தல் கூடாது.

2. அஷ்டமி, நவமி திதிகளைத் தவிர்க்க வேண்டும்.

3. மரணயோகம் இல்லாமல் சித்தயோகம், அமிர்தயோகம் ஆக இருக்க வேண்டும்.

4. ஓரைகளில் சூரியன், செவ்வாய், சனிஹோரை இல்லாத நேரமாக இருக்க வேண்டும்.

5. கௌரி பஞ்சாங்கப்படி ரோகம், சோரம், விஷம் என இருக்கக் கூடாது.

6. ராகுகாலம், எமகண்டம் நேரங்கள் இருக்கக் கூடாது.

7. சுபகாரியம் செய்பவருக்கு அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாக இருக்கக் கூடாது.

8. சுப காரியங்களுக்கு செல்லும் போது வடக்குதிசை, கிழக்குதிசை நோக்கிச் செல்ல வேண்டும்.

நல்ல நாள், நல்ல நேரம் இப்படித்தான் பார்க்க வேண்டும்.