பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களே!
தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளன.
தூரம் செல்லுங்கள்
செல்ஃபோனை விட்டு
தூரம் செல்லுங்கள்
டிவியை விட்டு
தூரம் செல்லுங்கள்
விளையாட்டை விட்டு
தூரம் செல்லுங்கள்
சோம்பலை விட்டு
தூரம் செல்லுங்கள்
அதிக தூக்கத்தை விட்டு
தூரம் செல்லுங்கள்
அதிக பேச்சை விட்டு
தூரம் செல்லுங்கள்
உடல்நலனைக் கெடுக்கும்
துரித உணவுகளை விட்டு
இவைகளை விட்டு
தூரம் சென்றால்
நம் மதிப்பை உயர்த்தும்
நல்ல மதிப்பெண்கள் என்னும்
எதிர்கால மலர்மொட்டு
அருகில் வரும்!
புத்தகத்தை விட்டு விலகாமல்
புதிய நம்பிக்கையோடு
அதிகாலை எழுந்து படியுங்கள்!
வெற்றி உங்கள் வசம்!!

கி.அன்புமொழி M.A. M.Phil. B.Ed.
முதுகலைத் தமிழாசிரியர்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!