நல்ல காலம் சென்றது
நன்றி கெடும் நிலை வந்தது
நயவஞ்சகம் மேலே நிற்குது
நம்பி நம்பி உதவி செய்தது
நம்மையே உதறித் தள்ளுது
நல்மனம் நகர்ந்து போகுது
நடுவில் தீமை தீமூட்டுது
நன்மை அதில் பற்றி எரியுது
நழுவும் நாடக வாழ்வில்
நன்றி குறையுது தினம்தினம்
நசுங்கும் காலம் போல்
நன்றி மறையுது
உய்வில்லை நன்றி கொன்றார்க்கு
உள்ளத்தில் அதை நீ வை
கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!