சொற்களே மலர்களாக தூவித்
தொழுது வணங்கி நின்னைத்
தொடருவேன் நாச்சியாரே,
கருணை பொங்கி அருளுவீரே!
முப்பெரும் தேவிமார்க்கும்
முந்தி நீர் மூவருள்ளே
எப்பொருள் யாவும் நீரே
ஆந்தனைக்கும் அன்னையாரே!
திருவிழிப் பார்வையாலே
கீழ் மகன் புண்ணியன் ஆக,
நின் புருவமே அசைந்து ஆட
திருமகன் அருளும் பேறால்
பெறுவரே விரும்பும் வண்ணம்!
மழலைச்சொல் கேட்கும் தாயே
மகிழ்வதே உமது இயல்பே – நின்
கழலையே சூழ் பிடிக்கும் எம்
குறை களைவாய் விரைந்து நீரே!
கருணையே அன்னை உள்ளம்
குணமதோ அருளின் வெள்ளம்
அரங்கனின் தேவியாரே
பிராட்டியே நினைவோம் நாங்கள்!
மங்களம் ஆன நீரே
திருமகள் அழகியாரே
அடியவரை காத்து நிற்கும்
திருவரங்கன் மஹிஷியாரே!
நின் திருவடியே
கதியே என்போம்!
உமது சேர்த்தியால்
நாங்கள் உய்வோம்!
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!