தேன் இருக்கும் இடத்தினைத்
தேடி மொய்க்கும் வண்டுபோல்
சீனி உள்ள இடத்தினைத்
தேடி ஊரும் எறும்புபோல்
பழம் நிறைந்த சோலையைப்
பார்த்துச் செல்லும் கிளியைப்போல
வளம் நிறைந்த நாட்டிலே
வந்து சேரும் மக்களைப்போல்
பள்ளமான இடத்தினைப்
பார்த்துப் பாயும் வெள்ளம்போல்
நல்ல நல்ல நூல்களை
நாடி நாமும் பயிலுவோம்.
-அழ.வள்ளியப்பா