நாட்படு தேறல் வாழ்த்து

இராமசாமி அங்கம்மாள்

திருமகனாய்ப் பிறந்தார்

வைகை நதிக் கரையினிலே

தமிழ் மகனாய் வளர்ந்தார்

தென்னந்தோப்புக் காற்றுப்பட்டு

பைந்தமிழைப் படித்தார்

பச்சையப்பன் கல்லூரிக்குள்

பைய வந்து நுழைந்தார்

முதல் வகுப்பில் வெற்றிபெற்று

மொழிபெயர்ப்பில் புகுந்தார்

பயமின்றி பாரதியைப்

பார்வையிலே கவர்ந்தார்

பொன்மாலைப் பொழுதில்

கறுப்புச் சூரியனாய் உதித்தார்

விமர்சனத்தை மீறி பல

விருதுகளை வென்றார்

தமிழ்மொழியின் பெருமையினை

தரணிக்குத் தந்தார்

இன்று நாட்படுதேறலிலே

நம்மோடு வாழ்வார்

தமிழோடு வாழ்வார் – தமிழ்

நலமாக வாழ்வார் அவர்தம்

நாட்படு தேறல்

நாடெங்கும் ஒலிக்கட்டும்!

முனைவர் சொ.சிதம்பரநாதன்
பொருளாதாரத் துறைத்தலைவர்
இராச‌பாளையம் ராஜுக்கள் கல்லூரி
இராச‌பாளையம்
கைபேசி:  9486027221

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.